எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் டாட்டா நனோ கார்கள்

டீமோ Disel and Motor Engineering PLC (DIMO)  நிறுவனம் அண்மையில் நனோ மை லேஜ் ரலி (Nano Mileage Rally) ஒன்றை நடாத்தியிருந்தது. எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் அதிசிறந்த காராக டாட்டா நனோ விளங்குகின்றது. என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்வதற்கு இந்த நிகழ்வு உதவியுள்ளது. கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்குச் சென்று திரும்பிய இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 50 நனோ உரிமையாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் டீமோ மற்றும் டாட்டா, பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அனைத்து நனோ காரினதும் எரிபொருள் தாங்கி முற்றாக நிரப்பப்பட்டு பாதுகாப்பு ஸ்டிகர் ஒட்டப்பட்டது.

நீர்கொழும்புக்குச் சென்ற திரும்பும் வரையில் பல பரிசோதனை நிலையங்க ளையும் கடக்க வேண்டிருந்தது. கார் ஒன்று தனது நிலையத்திற்குத் திரும்பியதும் பயிற்றப்பட்ட தொழினுட்பவியலாளர்கள் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டனர்.

ஆச்சரியப்படத் தக்க வகையில் சில கார்கள் லீற்றருக்கு 40 கி. மீ. பயணித்திருப்பதை அவதானிக்க முடிந்தது. அனைத்து காருகளுமே லீற்றருக்கு 18 கி. மீ. சிக்கன பயணத்தை மேற் கொண்டிருந்தன. மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைப் பேணிய சாரதிகள் பண வெகுமதி வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்தப் பண வகுமதிகள் ரஞ்சித் பண்டிதகே (தலைவர்- டீமோ) திரு. கஹனத் பண்டிதகே (டீமோ- நிறைவேற்று அதிகாரி), யசந்த விஜேசேகர (டாட்டா பயணிகள் காரின் தலைமை அதிகாரி) மற்றும் எஸ். ரகுநாதன் (பிராந்தியத் தலைவர்- டாட்டா மோட்டர்ஸ்- இந்தியா) ஆகியோரினால் கையளிக்கப்பட்டிருந்தது.

ரத்தன் டாட்டா உருவாக்கிய டாட்டா நனோ, டாட்டா மோடர்சின் ஒரு தொழினுட்பப் புரட்சியாரும் பிற இந்திய மலேசிய தயாரிப்புகளை விட இவற்றில் பல வசதிகளும் தெரிவுகளும் உள்ளன. (pover shuters, central Locking, A/C, Stereo With CD Player, Bluetooth Hands Free Kit) இவை அனைத்திற்கும் 4 வருட/ 90,000 கி.மீ. உத்தரவாதம் கிடைக்கிறது.

மேலும் முதல் 15,000 கி. மீ. வரையான தூரத்திற்கு 3 இலவச சுத்திகரிப்பு சேவைகள் வழங்கப்படும். கண்ணைக் கவரும் வர்ணங்களில் வரும் இந்த கார் வகை, பார்ப்பதற்கு அழகானதும் சிக்கனமானதுமான வாகனத் தெரிவாக விளங்குகின்றது.

-thinakaran

Published by

Leave a comment