எதிர்வரும் தேர்தல்கள்: மு.கா. நிபந்தனை!

-MMS

எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களின் போதும் தமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுகின்றன என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment