ஐரோப்பா கிண்ணமும் துவேச சண்டைகளும்

ரஷ்ய ஆதரவாளர் ஒருவர் போலந்து ஆதரவாளர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சி

போலந்துக்கு எதிரான முதலாவது கோலை ரஷ்யா இட்டபோது போலந்து ஆதரவாளர்களால் மைதானத்துக்குள் வீசப்பட்ட பட்டாசு

-MJ

தற்பொழுது உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் ஐரோப்பா கிண்ணப் போட்டிகளில் இனத்துவேசம் ஆதிக்கம் செலுத்தி இருப்பதாக ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சபை வருத்தம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போலந்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பா கிண்ணத்துக்கான லீக் போட்டிகள் தற்பொழுது பலத்த பரீட்சைக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை போலந்தின் வார்ஸோ மைதானத்தில் இடம்பெற்ற ரஷ்யா-போலந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முடிவு 1:1 என அமைந்தது. எனினும் சம நிலையில் முடிவடைந்த போட்டியை தாங்கிக்கொள்ள முடியாத போலந்து இரசிகர்கள் மைதானத்துக்குள் கலகம் வினைவிக்க முயன்றனர். போட்டி முடிந்த பின்னர் ரஷ்ய ஆதரவாளர்களை நோக்கி தாக்குதல் நடாத்தப்பட்டன. ரஷ்யர்களும் ஜேர்மனியர்களும் குறிவைக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 15 வெளிநாட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். 183 கலகக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகள் இச்செயலைக் கண்டித்திருக்கின்றன. பத்திரிகைகள் விமர்சித்திருக்கின்றன. அதி தொழிநுட்பங்கள் இப்போட்டிகளில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் கமாராக்கள், புகைப்படங்கள் நிமிடத்திற்கு நிமிடம் பரீட்சிக்கப்பட்டு வருகின்றன. மேலும் என்றும் இல்லாதவகையில் இரு கோல் காப்பாளர் எல்லைகளிலும் இரு மேலதிக உப மத்தியஸ்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment