துரித அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் காத்தான்குடி

படங்கள்: MBM.றிப்தி

-MJ

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்காக தற்பொழுது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானமும் பிரதான வீதியும் துரிதமாக அபிவிருத்தியும் அலங்காரங்களும் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே மீராபாலிகா முன்றலில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள ‘பிஸ்மில்லாஹ்’ சுற்றுவட்ட அலங்காரச் சின்னமானது உலகமக்களை காத்தான்குடியின் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை! பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM.  ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேரடி பார்வையின் மூலமாக இவ் அபிவிருத்திகளும் அலங்காரச் சின்னங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இம்மைதானத்தைச் சூழவுள்ள வீதிகளும் கடற்கரை வீதியும் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத் தேசிய உதைப்பந்தாட்டப் போட்டியின்போது ஊரின் உணவகங்களும் வர்த்தக நிலையங்களும் மேலதிய வருமானங்களை ஈட்ட  முடிவதுடன் ஊரின் புகழும் ஓங்கச் செய்யும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment