வாழைச்சேனை நகரின் பாதுகாப்பு தொடர்பாக வாழைச்சேனை வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை மாலை வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னாள் இடம்பெற்றது.
வாழைச்சேனை பஸாரில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த கடை மற்றும் நகரின் பாதுகாப்பு தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பஸாரின் பாதுகாப்புக்கு வர்த்தகர்களின் உதவியுடன் பாதகாப்புக் குழு ஒன்று நியமிப்பது என்றும் இக்குழுவினருடன் தொடர்ந்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தேவை ஏற்படுமிடத்து இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெறப்படும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வர்த்தக சங்கத் தலைவர் ஏ.எஸ்.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரத்னசூரிய, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர, சித்தாண்டி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெப்டன் கே.பி.ஆர்.லக்மல், கும்புறுமூலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி எல்.ரீ.ஐ.முனசிங்க, வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சகாப்தீன், வர்த்தக சங்க செயலாளர் எம்.ஐ.எம்.லத்தீப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-tamilmirror
Leave a comment