மேல் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் சுமார் 250 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந் நியமனங்கள் வழங்கி வைக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான நியமனங்களை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் கல்விமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வழங்கி வைப்பர். விஞ்ஞானம், வர்த்தகம், தகவல் தொழில் நுட்பம், கலை ஆகிய பிரிவுகளுக்கெனவே பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இந் நிகழ்வில் மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வர்.
-Thinakaran
Leave a comment