ஜோர்தானில் ஏமாற்றப்பட்ட 300 பெண்களை அழைத்து வருமாறு அரசிற்கு வேண்டுகோள்

ஜோர்தானில் வேலைவாய்ப்பு தேடிச் சென்று ஏமாற்றப்பட்ட நிலையில் அங்கிருக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறாக இலங்கைப் பணிப் பெண்கள் 300 பேர் வரையில் ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
இப் பணிப் பெண்கள் தொடர்பிலும் இவர்களை இலங்கைக்கு அழத்து வருவது தொடர்பிலும் அரசு எந்த வித அக்கறையும் கொள்ளவில்லை என அவர் குற்றஞ் சுமத்தினார்.

எனினும் ஜோர்தானில் உள்ள இலங்கைப் பணிப்பெண்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சிகளை தாம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகாரி தெரிவித்தார்.

-adaderana

Published by

Leave a comment