-MMS
இரு வெவ்வேறு விழாக்களிற்காக ஒரே இடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஐஸ்கிறீமை உட்கொண்டதன் காரணமாக கல்முனை, பான்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் மற்றும் திருமண வைபவத்தில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேருக்கும் மேற்பட்டோர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11) இரவு ஏழு மணிக்குப் பின்னதாக சத்தி, மயக்கமுற்ற நிலையிலும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Leave a comment