அட்டாளைச்சேனையில் “சீ பிளேன்’’ இறங்கு தளம்

அட்டாளைச் சேனை கோண வத்தை ஆற்றில் நீரியல் விமான இறங்குதுறை (Sea plane yard) நிர்மாணிப்பதற்கான இடத்தினை சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தொழில்நுட்ப உயரதிகாரிகள் குழு பார்வையிட்டுச் சென்றுள்ளது.

கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை (08) விஜயம் செய்த குழுவினர் நீரியல் விமான இறங்குதுறை அமையவுள்ள இடத்தினை நேரடியாகச் சென்று பார்வை யிட்டனர்.

மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமா லெப்பை விமான சேவை தொழில்நுட்ப முகாமையாளர் புசதி காரியவசம், விமான சேவை நிர்வாக முகாமையாளர் சஞ்சீவ ஜயசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இங்கு சென்றனர்.

நீரியல் விமான இறங்குதுறை நிலையம் அமையவுள்ள ஆற்றின் ஆழம் மண்ணின் தன்மை போன்ற ஆய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதல்கட்டமாக கோணவத்தை ஆற்றின் எல்லையை நிர்மாணித்து இரு மருங்கிலும் வீதி அமைத்து நவீனரக மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். ஆற்றங்கரையில் பாரிய பூங்கா ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதால் இதற்கான ஆரம்ப நடிவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

-தினகரன்

Published by

Leave a comment