புலிகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடையூறுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைவதாக ஊட கத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நாடு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றே நாங்கள் கருதுகின்றோம். எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியில் வந்து உரையாற்றியமை முக்கியத்துவம் வாய்ந்த விடய மாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் அமைப்பு இங்கி லாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் தடை செய் யப்பட்ட அமைப்பின் ஆதர வாளர்கள் இவ்வாறு ஆர்ப் பாட்டம் நடத்துவதும் நிகழ்வு களுக்கு இடையூறு விளைவிப் பதும் உகந்த விடயங் களாக எங்களுக்குத் தெரிய வில்லை. அந்த வகையில் இந்த நிலை மையை தடுத்திருக்க இங்கிலாந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண் டும் என்பதே எமது நிலைப் பாடாகும்.
அவ்வாறு முடியாமல் போனமை குறித்து கவலையடை கின்றோம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப் பட்டிருக்க வேண்டும். இந்த விடயம் குறித்து நாங்கள் கவலையடைகின்றோம்.
Leave a comment