-MMS
யாழ் மாநகர சபை எல்லைக்குள் வழிபாட்டுத் தலங்களை நிறுவதற்கு யாழ் மாநகர சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
புதிய மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பது தொடர்பாக புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சினால் 02.09.2012 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி யாழ் மாநகர சபை எல்லைக்குள் புதிய மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு மாநர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்கப்படும் வழிபாட்டுத் தலங்களை இனம்கண்டு ஆரம்பத்தை தவிர்ப்பதற்கு கிராம சேவையாளர்களின் பங்களிப்பையும் யாழ் மாநகர சபை முதல்வர் கோரியுள்ளார்.
Leave a comment