MMS
கடந்த இரு மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டுவரும் கிழக்குமாகாணசபை கலைப்பு இம்மாதம் 26ம் திகதி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் பிரதிநிதிகளின் கணிப்பின்படி இத்தகவல் இன்று வெளியாகியுள்ளன. உத்தியோகபூர்வமாக ஒருசில தினங்களில் அறிவிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.
இந்நிலையில் கிழக்குமாகாணசபையைக் கைப்பற்றும் நோக்கில் பலத்த போட்டி இம்முறையும் இடம்பெறுவது உறுதியான நிலையில், ஸ்ரீல. சு.க., த. தே. கூ., மு. கா., தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி ஜே. வி. பி. கட்சிகளுக்கிடையே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் யாரை வேப்பாளராக நியமிப்பது என்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாகவிருக்கின்றது.
காத்தான்குடியிலும் இத்தேர்தலுக்கான வேட்பாளர் போட்டிகள் தற்பொழுது நிழல் பிரதிநிதகளாக இடம்பெற்றுவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment