இலங்கையில் பௌத்த விகாரைகள் கட்டியெழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது: கோத்தாபய

இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளை கட்டி எழுப்பும் அரசின் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ
சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை, வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அந்த நிகழ்வில் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்களில் அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது. அத்துடன் அவை சேதமடைந்த நிலையிலும் இருந்தது.

இந்த நிலை இராணுவத்தினரின் முயற்சியினால் மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவற்றை நாங்கள் மரபுரிமையுடன் பாதுகாப்பாற்றும் நடவடிக்கைகளை எவராலும் தடுக்க முடியாது.

அதற்காக ஏற்படும் எந்தவிதமான சவால்களையும் ஒரு சவாலாக நாம் மேற்கொள்வோம். குறிப்பாக பௌத்தன் என்ற முறையில் அதனை நடைமுறைப்படுத்த சகல நடவடிக்கைகளும் எம்மால் மேற்கொள்ள முடியும் என்று கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

-tamilwin

Published by

Leave a comment