12 வயதுக்கு குறைவான மாடுகள் அறுக்கத் தடை

மிருகங்கள் கட்டளை சட்டத்தின் கீழ் 12 வருடங்களுக்குக் குறைந்த மாடுகளை அறுவைக்காக பாவிப்பது குற்றமாகும்.

அனுமதிப்பத்திரத்துடன் நடத்தப்படும் அறுவை நிலை யங்களிலும் அறுக்கப்படவுள்ள மாட்டுக்கு 12 வருடங்களுக்கு அதிகம் இருக்க வேண்டும் என கால்நடை மருத்துவர் அத்தாட்சிப்படுத்தினாலே ஒழிய அந்த மாட்டை அறுக்க முடியாது.

அண்மைக்காலங்களில் கன்றுக்குட்டிகள் இறைச்சிக்காக அறுப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனைப் பரிசீலித்து மேற்கண்ட சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்காலத்தில் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக தொர்ச்சியான தேடுதல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

-Thinakaran

Published by

Leave a comment