-MMS
வாழைச்சேனையின் பிரதான வீதியில் அமைந்துள்ள வாழைச்சேனையை சேர்ந்த நாசர் என்பவரின் பிரபல தனியார் பாதணி விற்பனைக்கடையொன்று வியாழக்கிழமை (07) இரவு 7.30மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.தீ விபத்தினை தொடர்ந்து, பிரதேச சபையினரும் வாழைச்சேனை பொலிஸாரும் பிரதேச இளைஞர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் கடை முற்றாக எரிந்து பொருட்கள் நாசமாகியுள்ளதால், வர்த்தகருக்கு பெருமளவு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின் ஒழுக்கு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment