தேசிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளின் மும்மொழித் திட்டத்தை நாடெங்கிலும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு ஆங்கில மொழி அறிவு முக்கியத் துவம் பெறுகிறது.
இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களு க்கு நல்ல வேலைவாய்ப்பையோ அல்லது ஒரு சிறந்த வளமான எதிர் காலத்தையோ எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தி ருப்பதனால், ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இந்நா ட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளன.
இதற்காக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கல்வி மற்றும் உயர்கல்வி அமை ச்சர்களுடன் கலந்துரையாடி நாட்டில் ஆங்கில மொழி ஆசிரியர்க ளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆங்கிலத்தை கற்றுக் கொடு ப்பதற்கான பயிற்சிப் பாசறைகளை அனைத்து மக்களுக்கும், குறிப் பாக ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறாத அரசாங்க மற்றும் தனியார் துறை ஆசிரியர்களுக்கும் ஏனைய அரசாங்க, தனியார் துறை ஊழி யர்களுக்கும், வேலையற்ற இளைஞர் மற்றும் யுவதிகளுக்கும் நடத்து வதற்கான ஒழுங்குகளை செய்து வருகின்றார்.
ஆங்கில அறிவு இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எவ்வளவு அவசி யமோ அந்தளவிற்கு தேசிய மொழிகளான சிங்களத்தையும், தமிழ் மொழி யையும் கற்றுக் கொள்வது அவசியமாகும். இந்த உண்மையை உணர் ந்திருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமிழ், முஸ்லிம் மக் கள் அதிகமாக இருக்கும் கிழக்கு மாகாணத்திலும், வட மாகாணத்தி லும் தமிழ் மக்களுக்கு சிங்கள அறிவை கற்றுக் கொடுப்பதற்கான பயி ற்சி வகுப்புகளை நடத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின் றார்.
மாகாண சபைகள், பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் சிங்கள பாட வகுப்புகளை மாவட்ட ரீதியில் நடத்துவதற் கான ஒழுங்குகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இப்போது பூர் த்தி செய்திருக்கிறார்.
கல்முனை மாநகர சபையின் மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப், இந்த சிங்கள மொழி பயிற்சி வகுப்புகளை தமது பிரதேசத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் நடத்துவதற்கு தாம் சகல உதவியையும், ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
இவர் அமைச்சருடன் கொழும்பில் நடத்திய சந்திப்பில் கல்முனையிலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வகுப்புகள் முடிவ டைந்த பின்னர் அங்கு சிங்கள மொழி வகுப்புகளை நடத்தலாம் என் றும், தாம் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க முடியுமென்றும் உறுதி யளித்துள்ளார்.
இதனடிப்படையில் தேசிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமை ச்சு, சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்த சிங்கள மொழி பயிற்சி வகு ப்புகளை நடத்துவதற்காக அப்பிரதேசங்களில் இருந்தே சிங்கள மொழி யில் தேர்ச்சி பெற்ற தமிழ் மொழியை நன்கு அறிந்துள்ளவர்களை ஆசி ரியர்களாக நியமிப்பதற்கும் இப்போது நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றது.
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு சுமூகத்தீர்வொன்றை ஏற்ப டுத்த வேண்டுமாயின் தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களத்தையும், சிங் கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்ளுதல் அவசியம். இந்த நல்லெண்ணத்துடன் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தென்னிலங் கையில் இப்போது தமிழ் மொழி பயிற்சிப் பாசறைகளை மேற் கொள் வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தென்னிலங்கையில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் குறிப்பாக பொலி ஸார், தமிழ் மொழியறிவை பெற்றிருக்க வேண்டுமென்ற ஜனாதிபதி அவ ர்களின் பணிப்புரைக்கு அமைய பொதுநிர்வாக அமைச்சு இப்போது தமிழ் தெரிந்த சிங்கள உத்தியோகத்தர்களை கூடுதலாக தென்னிலங் கையில் நியமித்த வண்ணம் இருக்கிறது.
பொதுமக்களுக்கு பொது வாக அதிகமாக சேவை செய்ய வேண்டியிருக்கும் ஒரு அரசாங்கத் திணைக்களம் பொலிஸ் திணைக்களமாகும். ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடியவரை தமிழ் மொழியில் எழுத, வாசிக்க மற்றும் பேச்சுத் திறமையுடைய பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இப்போது நியமித்து வருகின்றார்.
ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் 24 மணி நேரமும் தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் வைத்திருப்பதற்கு பொலிஸ் மா அதிபர் எடுத்துள்ள நடவடிக்கைகள் இப்போது நல்ல வெற்றியை அளித்துள்ளன.
1956ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சிங்கள மட்டும் சட்டம் நம்நாட்டில் இனப்பிரச்சினை உருவாகுவதற்கு அடித்தளமாக அமைந்தது. எனவே, இனப்பிரச்சினையை எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சுமூகமாக தீர்த்துவைக்க வேண்டுமாயின், மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அந்த மக்கள் தங்கள் மொழியிலேயே அரச கருமங்களை செய்து கொள்வதற்கு இடமளிக்க வேண்டுமென்ற ஒர் உன்னதமான நிலைப்பாட்டை அரசாங்கம் இப்போது கடைப்பிடித்து வருகின்றது.
அதனடிப்படையிலேயே மும்மொழித் திட்டத்தின் கீழ் சிங்களவர்களுக்கு தமிழையும், தமிழர்களுக்கு சிங்களத்தையும் கற்றுக் கொடுக்கும் திட்ட த்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஜனாதிபதி அவர்கள் அமை ச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஒப்படைத்திருக்கிறார். அமைச்சர் நாண யக்கார அந்தப் பணியை இன்று வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண் டிருக்கிறார்.
-Thinakaran
Leave a comment