மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

-MMS

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் நிறைவு கான் வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்தவ உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கூடிய இவர்கள் 5,000 ரூபா கஸ்ட படி வழங்கப்பட வேண்டும், தொலைபேசி பாவனை கொடுப்பனவு 4,000 ரூபா வழங்கப்பட வேண்டம், மேலதிக சேவை நேர கொடுப்பனவு வழங்குவதை அடிப்படை சம்பளத்தை 90 சதவீதத்தால் பிரித்து வழங்க வேண்டும், தாதிய உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண சபைகளுக்கு வழஙகும் அதிகாரத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published by

Leave a comment