பூகொட பாலத்திற்கு கீழ் 24 கரட் தங்கத் துகள்கள்

-MMS

பூகொட கனம் பல்ல பாலத் திற்கு கீழுள்ள களனி ஆற்றுப் படுகையில் 24 கரட் தங்கத் துகள்கள் அதிகளவில் கிடைப் பதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

பூகொடை குமாரிமுல்லை பிரதேசத்தில் உள்ள ஜம்புத் துறையிற்கும் கனம்பல்ல பாலத்தின் கீழ் இருக்கும் ஆற்றிற்கும் இடையில் 1 கிலோ மீற்றர் தூரத்திலே இவ்வாறு தங்கத் துகள்களும் மாணிக் கமும் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது.

பூகொட குமாரிமுல்ல பிரதேசத்தில் தங்க அகழ்விற்கு அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் தற்பொழுது இவ்விடத்திலேயே தங்க அகழ்வில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு பெறுமதியான மாணிக்கக் கல்லும் கிடைப்பதாக அறியப்படுகின்றது.

Published by

Leave a comment