பணிப்பெண்களுக்கு தொழில் வழங்குவோர் ஆயிரம் டொலர்கள் வைப்பிலிட வேண்டும்

தனிப்பட்ட முறையில் பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கை பெண்களுக்கு அந்நாட்டின் தொழில் வழங்குநர் 1000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிட வேண்டும்.

இந்நடைமுறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனா லங்காதீர அறிவித்துள்ளார்.

தொழில் வழங்குநரால் 1000 அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்படாமல் எவரும் தனிப்பட்ட முறையில் இனி மேல் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியாது. இது தொடர்பாக அந்தந்த நாடு களிலுள்ள இலங்கை தூதரகங் களுக்கும் அறிவிக்கப்பட் டுள்ளது.

2011 ஆம் ஆண்டு மட்டும் தனிப்பட்ட முறையில் 28, 984 பேர் பணிப் பெண்களாக சென்றுள்ளனர். 2012 இல் இன்றுவரை 11,165 பெண்கள் சென்றுள்ளனர்.

எமது நாட்டிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் துணையின்றி அந்நாட்டிலுள்ள உறவினரின் உதவியுடன் அல்லது வேறு வழிகளில் பணிப் பெண்ணாக விசா பெற்று தொழில் ஒப்பந்தம் பெற்று வெளிநாடு செல்பவர்களே தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்பவர்கள் என கருதப்படு கிறார்கள்.

இவ்வாறு செல்பவர்களின் பாதுகாப்பும், சேவைக் காலத்தினுள் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகையில் இவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்புதிய ந¨முறை அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு செல்லும் பெண்கள் தனது சேவைக்கால ஒப்பந்தம் முடிவடைந்து நாடு திரும்பும்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை மருத்துவ கொடுப்பனவு இலவசமாக வழங்கப்படவேண்டிய விமான டிக்கட் என்பவை கிடைக்காமை போன்ற முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்து வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டால் அவர் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ள 1000 டாலர்களிலும் ஈடு செய்வதுடன் மீதிப் பணம் தொழில் வழங்குநருக்கு திருப்பி வழங்கப்படும்.

இவ்வாறு தனிப்பட்ட முறையில் பணிப்பெண் ஒருவரை பெற்றுக்கொள்ள விரும்பும் தொழில் வழங்குநர் விசா மற்றும் தொழில் ஒப்பந்தத்துடன் 1000 அமெரிக்க டொலர்களை இலங்கை தூதரகத்தில் வைப்பிலிடவேண்டும். அதன் பின்னரே பணியகம் அவருக்கு செல்ல அனுமதி வழங்கும்.

-Thinakaran

Published by

Leave a comment