சட்டவிரோத மிண் இணைப்பைப் பெற்றவர்களின் தண்டப்பணம் ரூ.35 இலட்சம்

-MMS

நாட்டில் சட்டவிரோதமாக மிண் இணைப்பைப் பெற்றவர்களைக் கண்டுபிடிக்கும் திடீர் பரிசோதணைகள் கடந்த சில மாதங்களாக நாட்டில் இடம்பெற்று வந்தன. இந்தவகையில் கடந்த மே மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்றவர்கள் தொடர்பில் 420 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் மாணி மாற்றுவது, பாரியளவான தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட இணைப்பிணை பெறுவது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மின் மாணி மற்றுதல் தொடர்பாக மட்டும் 176 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலமாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு 219 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.

இதில் 37 இலட்சம் ரூபா நீதிமன்ற தண்டப் பணம் மூலமாகவும் 181 இலட்சம் ரூபா அமைச்சின் மூலமும் பெறப்பட்டுள்ளன.

இருந்தும் இவ்வாறான முறையற்ற மிண்இணைப்பைப் பெறுவது தண்டணைக்குரிய குற்றமாகும். இவ்வாறான இணைப்புகளை பெற்றவர்கள் அண்மையில் மின்சாரம் தாக்கி மரணித்ததும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment