-படங்கள்-MBM. றிப்தி
காத்தான்குடி 3, முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் பல வருடங்களாக திடகாத்திரமாக நிழல்கொடுத்துவந்த காட்டுத்தேங்காய் மரம் நேற்றிரவு வேரோடு சாய்ந்தது. இம்மரத்திற்கு வயது தெரியாதிருந்தும், நாம் அறிந்தகாலம் தொட்டு இம்மரம் மெத்தைப்பள்ளி முன்றலில் திடகாத்திரமாக நின்று நிழல் கொடுத்துவந்ததை மறக்கக முடியாது!
இம்மரங்கள் போன்று பல வருட வரலாற்றைக் கொண்டிருந்த காத்தான்குடி 1, பெரியமௌலான கபுறடி முன்றலில் திடகாத்திரமாக நின்ற ஆலமரமும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜாமியுழ்ழாபிரீனுக்குச் சொந்தமான காத்தான்குடி 6 , மையவாடியில் இது போன்ற பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட ஆல மரமும், அரச மரமும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
படங்களினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக்’ செய்யவும்.





Leave a comment