* நுரைச்சோலை 24 மணி நேரமும் செயற்பாடு
* 900 சீனர்கள், 600 இலங்கையர் பணியில்
மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி வருவதன் காரணமாக இந்த வருடத்தில் மின்சார சபைக்கு 15 ஆயிரம் மில் லியன் ரூபாவை சேமிக்க முடிந்த தாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் 24 மணி நேரமும் இயங்குவதாலே மின்வெட்டு அமுல்படுத்தாமல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடி ந்ததாகவும் 8 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டியதாகவும் அவர் கூறினார். வாய் மூல விடைக்காக எழுப்பப்பட்ட இருவேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,
நுரைச்சோலை அனல் மின் நிலைய 2ஆம் கட்டப் பணிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. நுரைச்சோலை அனல் மின் நிலைய பொறியியல் மற்றும் தொழில் நுட்ப பணிகளில் 1900 சீன ஊழியர்களும் 600 இலங்கை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெப்ரவரி 18ஆம் திகதியில் இருந்து இன்று வரை இந்த மின் நிலையத்தினூடாக மின் உற்பத்தி பணிகள் ஒரு நிமிடம் கூட நிறுத்தப்படவில்லை. 20 வீத தேவையை இது நிறைவு செய்கிறது இல்லாவிட்டால் மின்வெட்டு அமுல் செய்ய வேண்டியி ருக்கும்.
எமது வலயத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என அனேக நாடுகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. எமது நாட்டில் மட்டுமே 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காட்டுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் 24 மணி நேரமும் இயங்குகிறது. சகல எம்.பி.களும் அங்கு வந்து பார்வையிட முடியும் எனவும் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார்.
-Thinakaran
Leave a comment