டேவிட் கெமரூனைச் சந்தித்த ஜனாதிபதி: பாப்பரசரைச் சந்திக்க ரோம் பயணம்

-MJ

பிரித்தாணிய எலிசபத் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களுக்காக லண்டன் பயணித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், பிரித்தாணிய பிரதமரான டேவிட் கமரூனைச் சந்தித்து  இலங்கையின் சமகால, எதிர்கால திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பிரித்தாணிய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

உலகத் தலைவர்களுக்கான விருந்தோம்பலுக்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது உத்தியோக விஜயத்தை முடித்துவிட்டு தற்பொழுது ரோம் நகருக்கு ஜனாதிபதி சென்றுள்ளார். வத்திக்கான் செல்லவுள்ள ஜனாதிபதி, 16வது பாப்பரசரைச் சந்தித்து அங்கு இடம்பெறவுள்ள ஆராதணை நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment