-MJ
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 கோட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற இருக்கின்றது.
இதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான இருபது20 போட்டிகளுக்கு நிறைவான இரசிகர்களைக் காணமுடியாமல் இருந்தது பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்தது. எனினும் கண்டியில் நடைபெறும் இப்போட்டிக்கு அதிகளவிலான இரசிகர்கள் இப்போட்டியினைக்கான வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் சர்வதேச ஒருநாள் கிரிக்கட்போட்டியில் முதன்முதலாக பொதுவான சுற்றுப்போட்டியில் ஓர் பொதுமைதானத்தில் சந்தித்தன என்பது அனேகமானவர்களுக்குத் தெரியாத உண்மை. ஆம்! இரு அணிகளும் முதன்முதலாக 1975ம் ஆண்டு, ஜூன் மாதம் 14ம் திகதி, இங்கிலாந்தின் நொட்டின்ஹம் மைதானத்தில் சந்தித்தன.
புறுடன்ஸல் உலகக் கிண்ணம் (Prudential World Cup) என அழைக்கப்பட்ட கிரிக்கட் வரலாற்றின் முதலாவது உலகக்கிண்ணத்திலேயே இரு அணிகளும் முதன்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்றை ஒன்று சந்தித்திருந்தன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 192 ஓட்டங்களால் இலங்கையை இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. இறுதியாக இவ் இறு அணிகளும் பங்களாதேசில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் சந்தித்திருந்தன. ‘செரே பங்களா தேசிய (Shere Bangla National Stadium) மைதானத்’தில் 2012, மார்ச் மாதம் 15ம் திகதி இடம்பெற்ற இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களால் இலங்கையை வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரையில் மொத்தமாக 127 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சந்தித்திருக்கின்றன. இவற்றுள் 76 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 47 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. அத்துடன் முடிவுகளின்றி 3 போட்டிகளும், ஒரே ஒரு போட்டி சமநிலையிலும் முடிவடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இருபது20 தொடரை சமநிலைப்படுத்திய பாகிஸ்தான் அணி, தொடர்ந்தும் போராடும் என்பதே உலக கிரிக்கட் இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. என்னதான் பலம் பொருந்திய அணிகளை எதிர்பார்த்தோ எதிர்பார்க்காமலோ பாகிஸ்தான் வீழ்த்தினாலும் இந்தியாவுடன் இறுதியாக விளையாடிய முக்கிய போட்டிகளில் கோட்டைவிட்டதாகவே பாகிஸ்தான் அணிக்கு விமர்சனங்கள் வந்தவன்னமிருக்கின்றன.
இதேபோல்தான் இலங்கை அணிக்கும். எந்தவொரு சுற்றுப் போட்டிகளிலோ, தொடர்களிலோ இணையத்தளங்கள் கருத்துக்கணிப்பை மேற்கொள்ளும்போது ஏராளமான உலக விளையாட்டு இரசிகர்கள் இலங்கை அணியைத் தெரிவு செய்கின்றனர். எனினும் எதிர்பார்த்தோ, எதிர்பார்க்காமலோ இவர்களும் அண்மைக்காலமாக பல தொடர்களில் கோட்டைவிட்டு வருவதும் விமர்சணத்துக்குரியதே!
சொந்த நாட்டில் சவால்மிக்க ஓர் நிறைவான தொடரை விளையாட களமிறங்கிய இலங்கை அணி இருபது20 போட்டியில் கோட்டைவிட்டமாதிரியே போட்டியின் முடிவு அமைந்து இருந்ததும் கவனிக்கத்தக்கது.
இன்று பல்லேகலையில் இடம்பெற இருக்கும் இப்போட்டிக்கு நாணய சுழற்சியில் வெற்றிபெறுவதும் முதலில் துடப்பெடுத்தாடுவதும் வெற்றிவாயப்பை சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பிருந்தாலும், கள நிலவரம் எப்படி இருக்கும் என்பதற்கு பலமிக்க துடுப்பாட்டமே கைகொடுக்கப் போகின்றது என்பது திண்ணம்!
![images[9]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/images9.jpg?w=357&h=141)
Leave a comment