இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக  செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்று வந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் முதற் தடவையாக இம்முறை மட்டக்களப்பி பிராந்திய கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்றுது.

இதன்போது, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350 பேர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.கோபிந்தராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டபிள்யூ.ஏ. விமலவீர கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.

முகாமைத்துவம், தொழில்நுட்பம், ஆரம்ப கல்வி, தொழில்சார் ஆங்கிலம், சமூகவியல் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கான சான்றிதழ்களே இதன்போது வழங்கப்பட்டன.

-adaderana

Published by

Leave a comment