கிறிஸ் கெய்ல் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்!

-MJ
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்கெய்ல் இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய கிரிக்கட் சபையினால் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

32 வயதையுடைய கெய்ல் 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். இறுதியாக 2011ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (World Cup) விளையாடி இருந்தார். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபைக்கும் கெய்லுக்கும் இடையே மனக்கசப்புக்கள் ஏற்பட்டு வந்திருக்கும் இந்நிலையில் கெயில் மீண்டும் விளையாட அழைக்கப்பட்டிருக்கின்றார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆதரவாளர்கள் மாத்திரமன்றி, உலகில் ஏராளமான இரசிகர்கள் கெயிலின் ஆட்டத்தை இரசிக்கின்றனர் என்பது மறக்க முடியாத உண்மை.

19 சதங்களையும் 43 அரைச்சதங்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றிருக்கும் கெய்ல்,  ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8,087 ஓட்டங்களையும் பெற்றுள்ள ஓர் சிறந்த வீரர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment