வாகண விபத்தில் சாய்ந்தமருது இளைஞர் பலி

-MMS

சாய்ந்தமருது ‘பெஷன் ஹவுஸ்’ உரிமையாளர் முஹம்மது றியாஸ் எனும் 29 வயதுடைய வாலிபர் வாகன விபத்தில் சிக்கி இன்று மாலை அகால மரணமானார்.

கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்,  நிந்தவூர் – ஒலுவில் பிரதான வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது  லொறி ஒன்றுடன் மோதுண்டு படுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் வழியிலே மரணமடைந்துள்ளார்.

இவர் கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவருமாவார். பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment