நைஜீரியாவின் விமானம் விபத்து: பயணித்த அனைவரும் பலி!

-MMS

நைஜீரியாவின்  ‘டனா ‘ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் நேற்று நைஜீரியாவில் வெடித்து நொறுங்கியது. அபுஜாவில் இருந்து லாகோஸ் நோக்கிப் பயணித்த இவ்விமானத்தில் 153பேர் இருந்தனர். பெரும்பாலானோரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக நைஜீரியாவின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவ்விமானத்தில் பயணித்த 153 பேரும் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விமானத்தின் சிதைவுகளை அகற்றி கறுப்புப் பெட்டியைத் தேடும் நடவடிக்கையும் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Published by

Leave a comment