தரம் குறைந்த மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் செயற்படுவதை அரசு தடைசெய்ய வேண்டும்

பாலர் பாடசாலைகளை நாம் பொதுவாக மொன்டிசூரி பாட சாலைகள் என்றே அழைக்கின்றோம். மரியா மொன்டிசூரி அம்மையார் பாலர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற் படுத்தாமல் அவர்களுக்கு பூரண சுதந்திரத்தையும் அவர்கள் விரும் பியவற்றை செய்வதற்கான அனுமதியை சில கட்டுப்பாடுகளுடன் கொடுக்கும் மொன்டிசூரி கல்வியை 1907 ஆம் ஆண்டில் ஆரம் பித்தார்.

இவர் பாலர்களையும் சுற்றாடலுடனான தனது அனுபவத்தை யும் மையமாக வைத்தே இந்த மொன்டிசூரி கல்விமுறையை நெறிப்படுத்தினார். 1911 ஆம் ஆண்டில் மொன்டிசூரி கல்விமுறை அமெரிக்காவில் பிரபல்யம் பெற்றிருந்தது. இன்றுகூட அமெரிக்கா வில் மொன்டிசூரி ஆசிரியர்களுக்கு மற்றத் தொழில்களைவிட கூடுதலான வருமானமும் கிடைக்கின்றது.

பாலகர்களின் திறமைக்கு இடமளிக்கக்கூடிய வகையில் அவர்களின் வயதுக்கு உகந்த செய்முறைக் கல்வியை பாலகர்களுக்கு புகட்டு வதே இந்த மொன்டிசூரி சித்தாந்தமாகும்.

மொன்டிசொறி கல்வி முறை ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து 5 வயது எல்லையை அடையும் வரை அப்பிள்ளையை நல்வழிப்படுத்தி கல்வி புகட்டு வதற்கான ஒரு சிறந்த செய்முறையாக அமைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒரு பிள்ளை உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் வளர்ச்சி அடைகின்றது.

ஒரு மொழியை பாலகர்களுக்கு கற்றுக் கொடுத்தல் ஒரு வயது முதல் 3 வயது வரையிலும், பொருளைப் பிடித்து அதனை அடையாளம் காணும் உணர்வுகளை பிறப்பில் இருந்து 4 வயது வரையிலும், சிறு பொருட்களின் மீது விருப்பம் காட்டும் தன்மை 18 மாதங் களில் இருந்து 3 வயது வரையிலும், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை 2 வயது முதல் 4 வயது வரையிலும் ஏற்படும் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்தே மொன்டி சூரி கல்விமுறை மரியா மொன்டிசூரி அம்மையாரால் அறிமுகப் படுத்தப்பட்டது.

பாலகர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் மொன்டிசூரி செய்முறை பற்றி நன்கு கற்றுக்கொண்ட ஆசிரியர்களினால்தான் மேற்கொள் ளப்பட வேண்டும் என்ற திட்டவட்டமான நிபந்தனையை மரியா மொன்டிசூரி அம்மையார் விதித்திருக்கிறார். ஆனால் இன்று இலங்கை யில் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலுமே மொன்டிசூரி கல்வி முறையையும் அதன் உண்மையான தாற்பரியத்தையும் புரிந்துகொள்ளாத பயிற்சியும் அனுபவமும், கல்வித் திறமையை யும் அற்ற ஆசிரியைகள் மொன்டிசொறி கல்வி முறையை சீர் குலைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது

இன்று நாட்டில் திரும்பிய இடம் எல்லாம் மொன்டிசூரி பாலர் பாட சாலைகள் காளான்களைப் போன்று தோன்றி வருகின்றன. தனது வீட்டில் மூன்று பெரிய அறைகள் இருக்கும் செல்வச் சீமாட்டிகள் சில பாலர் வகுப்பு மேசை நாற்காலிகளை விலை கொடுத்து வாங்கி கரும்பலகை மற்றும் சிறிய விளையாட்டுப் பொருட்களை வாங்கி அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமலே மொன்டிசூரி பாடசாலைகளை ஆரம்பிக்கிறார்கள்.

மொன்டிசூரி பாலர் பாடசாலைகளின் உரிமையாளர்களான இந்த செல் வந்தப் பெண்கள் சுமார் 4 மணித்தியாலங்கள் முதல் 5 மணி நேரம் வரையில் ஆசிரியப் பணிகளைச் செய்வதற்கு 18 வயதுக் குக் கூடிய சாதாரண தரத்தில்கூட சித்தியடையாத பெண்களை ஆசிரியைகளாக நியமித்து அவர்களுக்கு சுமார் 2 அல்லது 3 ஆயிரம் ரூபாயை சம்பளமாகக் கொடுத்து, அங்கு கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் இருந்து ஆயிரக் கணக்கில் பணத்தை சூறையாடுகிறார்கள்.

மொன்டிசூரி பாலர் பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு சரியான கற்கை நெறி எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு பொழு தைப் போக்கி, மற்றப் பிள்ளைகளுடன் விளையாடி, ஆடிப் பாடி மகிழ்வதற்கு மாத்திரமே இந்த மொன்டிசொறி பாலர் பாடசாலை கள் உதவுகின்றன.

மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கல்வி அமைச்சிடம் இருந்து முன்கூட்டியே அனுமதியைப் பெற்ற பின்னரே அவை மொன்டிசூரி பாலர் பாடசாலைகளாக பதிவு செய்யப்படுகின்றன. இலங்கையில் பிரதான நகரங்களில் நல்ல முறையில் கற்கை நெறிகளைக் கொண்டுள்ள மொன்டிசூரிப் பாலர் பாடசாலைகள் இத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் உதவி யுடன் செயற்படுவதை நாம் மறுக்கவில்லை.

ஆயினும் சுமார் 80 வீதமான மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் எவ் வித கற்கை நெறியையும் கடைப்பிடிக்காமல் அனுபவம் இல்லாத விடலைப் பருவத்தைத் தாண்டிய ஆசிரியைகளைக் கொண்டு நடத்தப்படுகின்றன. இங்கு செல்லும் பாலர்களுக்கு கல்வி கற்பத ற்கு ஒரு சரியான அடித்தளம் அமைவதில்லை. இதனால் இந்தப் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட ஓரிரு கவிதைகளை மனப்பாடம் செய்து பேசுவதற்கும், ஆங்கிலத்தில் பாலர் பாடல்களை பாடுவதற்கும் மாத்திரமே இந்தப் பிள்ளை களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இதனால் தரம் ஒன்று வகுப்புக்கு பாடசாலைகளில் சேர்க்கப்படும் போது ஒரு நல்ல மொன்டிசூரி பாலர் பாடசாலையில் கற்றுக் கொண்ட பிள்ளைகள் நேர்முகப் பரீட்சையில் கூடுதல் புள்ளி களை பெற்றாலும், சாதாரண தரம் அற்ற மொன்டிசூரி பாலர் பாட சாலைகளில் கற்றுக்கொண்ட பிள்ளைகள் அந்த அளவுக்கு சோபிப் பதில்லை.

தகுதியற்ற மொன்டிசூரி பாலர் பாடசாலைக் கல்விமுறை எமது நாட் டின் எதிர்கால சந்ததியினரின் கல்விக்கு தீங்கு இழைக்கக்கூடிய தாக இருப்பதனால் சகல மொன்டிசூரி பாலர் பாடசாலைகளிலும் கல்வி அமைச்சு பகுப்பாய்வு செய்து தரம் அற்ற பாலர் பாட சாலைகளை செயற்படுத்த அனுமதிக்கலாகாது. எமது நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின் கல்வி அமைச்சு மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் மீது கூடுதலான கவனத்தைச் செலுத்துவது அவசியமாகும்.

-Thinakaran

Published by

Leave a comment