-MMS
சென்றமாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பேச்சைக் கண்டித்து, மன்னார் தேவாயம் ஒன்றில் கடந்த வாரம் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றியம், இடம் பெயர்ந்தோர் அமைப்பு உள்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து, வெள்ளிக்கிழமையன்று கூடி, மன்னார் ஆயருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் கானிப் பங்கீடு ஆகியவற்றில் தலையிடுவதை மன்னார் ஆயர் தவிர்க்க வேண்டும், ஆயுத்தாரிகளாக இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள், ஆயர் விடயத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு தமழ்கட்சிகள் நேசக்கரம் நீட்டி முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த உதவ வேண்டும் எனவும் வினயமாக தமிழ்க்கட்சிகளை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கேட்டுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment