-MMS
கொமர்ஷல் வங்கி அதன் பிரத்தியேக கிளையான அல் அதாவா இஸ்லாமிய வங்கிச் சேவையின் கிழக்கு மாகாணத்திற்கான கிளையை அக்கரைப்பற்றில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் இஸ்லாமிய அடிப்படையிலான நிதிச் சேவைகளுக்கு ஷரீஆ இணக்கப்பாட்டுடன் கூடிய தனது வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் அக்கரைப்பற்றுக் கிளையில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வங்கியால் வழங்கப்படும் பல்வேறு இஸ்லாமிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வங்கிக் கரும பீடத்தில் பிரத்தியேகமான ஒரு அதிகாரி பணியாற்றுவார் என்று வங்கி அறிவித்துள்ளது. கொமர்ஷல் வங்கியின் பிரதான இஸ்லாமிய வங்கிப் பிரிவு கொழும்பு – 01 யோர்க் வீதி, ஹேமாஸ் கட்டடத்தில் செயற்படுகின்றது. இஸ்லாமிய நிதித்துறையில் தகுதி வாய்ந்த முக்கியமான மூன்று கல்விமான்களை உள்ளடக்கிய ஷரீஆ சபையின் கண்டிப்பான கண்காணிப்பின் கீழ் இது செயற்படுகின்றது. இவர்கள் மூவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வங்கியின் இஸ்லாமிய சேவைப் பிரிவு வைப்புச் சேவைகளான ‘முதாரபா’ சேமிப்புக் கணக்கு, ‘முதாரபா’ முதலீட்டுக் கணக்கு ‘முராபஹா’, ‘முஷாரகா’, ‘பிமினவிவ் முஷாரகா’ இஜாரா குத்தகை மற்றும் இறக்குமதி நிதித் தேவைகளுடன் காசோலைகளுடன் கூடிய நடைமுறைக் கணக்கு, வங்கியின் ATM வலையமைப்பின் ஊடான செயற்பாட்டு வசதிகள், வரவு அட்டைகளின் பாவனை வசதி, இணையத்தள வங்கி வசதி உட்பட ஏனைய வசதிகளும் இந்தச் சேவையூடாக வழங்கப்படுகின்றது.
![akkaraipattu%20email[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/akkaraipattu20email1.jpg?w=300&h=168)
Leave a comment