-MMS
காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட வேன் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்திற்குள்ளானதில் அவ்வேனில் பயணித்த இருவரும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
தம்புள்ளை பிரதான வீதியில் குறித்த வேன் லொறியொன்றுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்தது.
காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான வேனின் சாரதி எம்.ஏ.லத்தீப், எம்.நிப்றாஸ் ஆகியோரே பலியானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Leave a comment