படங்கள் இணைப்பு
–தகவல்: MBNS
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இப்பாடசாலையின் அதிபர் M.M. இஸ்மா லெவ்வை தலைமையில் 25-05-2012 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை ஹிஸ்புல்லாஹ் கூடைப்பந்தாட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இறுதி நிகழ்வில் இப்பாடசாலையின் கலை கலாச்சார நிகழ்வுகள், உடற்பயிற்சி நிகழ்வுகள் மற்றும் 4 இல்லங்களின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளும் பார்வையாளர்களை மகிழ்வித்துச் சென்றன. ரோஸ் இல்லம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், லோட்டஸ் இல்லம், ஜெஸ்மின் இல்லம் ஆகிய இல்லங்கள் தலா இரண்டாம், மூன்றாமிடங்களையும், ஓர்கிட் இல்லம் நான்காம் இடத்தினையும் பெற்றன.
இந்நிகழ்வில் உள்ளுர் , வெளியூர் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(படங்களினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்)







Leave a comment