பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் 36 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரித்தானியா 70 முதல் 80 வரையான இலங்கை அகதிகளை நாடு கடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அதில் 40 பேரை நாடு கடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவின் படி 40 அகதிகளை நாடு கடத்தாத பிரித்தானியா ஏனைய 36 இலங்கை அகதிகளையும் நேற்றைய தினம் நாடு கடத்தியது.
இவர்கள் அனைவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
-adaderana
Leave a comment