கிராம சேவையாளர் நியமனம்: வயதெல்லையை 40 ஆக அதிகரிக்க பொது நிர்வாக அமைச்சு திட்டம்

புதிய நியமனங்களில் ஆண்களுக்கு 80% பெண்களுக்கு 20% வாய்ப்பு

கிராம சேவகர்களாக நியமிக்கப்படுவோரின் வயதெல்லையை 21 முதல் 40 வயது வரை அதிகரிப்பதற் குப் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். அத்துடன் புதிதாக கிராம சேவகர்களை நியமிக்கும் போது ஆண்களுக்கு 80 வீத வாய்ப்பையும் பெண்களுக்கு 20 வீத வாய்ப்பையும் வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 3000ற்கும் மேற்பட்ட கிராம சேவகர் வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. அரசாங்கம் கிராமிய பிரதேசங்களை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற இக்காலகட்டத்தில் கிராம சேவகர்களின் பணி முக்கிய மாகவுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே கிராமசேவகர் வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

கிராம சேவகர்களின் வயதெல்லை சம்பந்தமாக கிராம சேவை அதிகாரிகளின் சங்கம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தது.

அதனைக் கருத்திற் கொண்டே 21 வயது முதல் 40 வயது வரை வயதெல்லையை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள் ளது.

-Thinakaran

Published by

Leave a comment