புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாளை இலங்கை வருகை!

பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு இன்று திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களை ஏற்றிய விமானம் இன்று காலை ஏழு மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அரசியல் புகலிடம்கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற குறித்த இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

-news.lk

Published by

Leave a comment