இலங்கைக்கு எதிராக செய்திகளை வெளியிடும் பல இணையத்தளங்களை நடத்தி வரும் நபர் ஒருவரே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிறிலங்காவின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களில் எட்டு வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்க காட்டியுள்ளார்.
தற்போது வடக்கின் பொருளாதார வளர்ச்சி 22 வீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசாங்கம் வடக்கில் எந்தளவான பணிகளை மேற்கொண்டுள்ளது என்பதை அறிய முடியும். எனினும் இதனை திரிவுபடுத்தி சர்வதேச ரீதியாக நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டுக்கு எதிராக எட்டு இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றை நடத்தி வருபவர் ஒருவரே என ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.
அந்த இணையத்தளங்களில் நாட்டுக்கு எதிராக சேறு பூசும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளிநாட்டவர்கள் இந்த இணையத்தளங்களில் இருந்தே தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர். இவற்றின் மூலம் இலங்கை தொடர்பாக தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment