கடந்த 25-05-2012 அன்று அரச பத்திரிகையில், கிழக்கு மாகாண முதலமைச்சரால் மட்டு. வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற மகாபொல புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் ஆற்றப்பட்ட உரை தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியில் பட்டதாரிகளை அவமானப்படுத்தும் வகையில் தரக்குறைவாக கருத்து வெளியாகியுள்ளது.
அது வேலையற்ற பட்டதாரிகள் போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கும் குறைவாக எடுப்பதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை மட்டுமே கோருவதாகவும், பட்டதாரிகளுக்கு தொழல்நுட்ப அறிவு, பொது அறிவு இல்லை என்றும் பட்டதாரிகள் அரச நியமனம் வழங்க தகுதியற்றவர்கள் என்றும் அவரது உரையில் கூறப்பட்டது.
இக்கூற்றானது முற்றிலும் தவறான கூற்றாகும். இது அவர் தமக்குரிய பதவியை மறந்து இவ்வாறு கூறுவது மட்டுமின்றி பல இடங்களிலும் பட்டதாரிகளை கேவலப்படுத்தியுள்ளார் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
அதுமட்டுமின்றி ஒரு சில பட்டதாரிகளை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த வேலையற்ற பட்டதாரிகளையும் கேவலப்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும். பட்டதாரிகள் ஆசிரியர் நியமனங்களை மட்டும் கோரவில்லை.
கடந்த காலம் எம்மால் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மகஞர்களில் 9 வகையான பலவகைப்பட்ட கல்விக்கு ஏற்ற தொழில் வாய்ப்பையே கேரியுள்ளோம்.
தகுதிக்குரியவர்கள் என்று தான் எங்களுக்கு பல்கலைக்கழகங்கள் பட்டம் தந்துள்ளது. மேலும் இதே போன்று அரசியல் வாதிகளும் பட்டதாரிகளை பற்றி குறை கூறும் முகமாக தமது கருத்துக்களை வெளியிடல் கண்டனத்துக்குரியதாகும்.
எமக்கு தகுதி இல்லையென்று கூறுபவர்கள் எமக்கு தகுதியை பெற்றுக் கொள்வதற்கான தொழில் பயிற்சிகளை வழங்க முன்வரவில்லை.
அதுமட்டுமின்றி பட்டதாரிகளைப்பற்றி கதைப்பதற்கு முதலமைச்சருக்கு கல்வி தொடர்பான என்ன தகுதி இருக்கின்றது எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகள் (கௌரவ முதலமைச்சர்) இவ்வாறு பட்டதாரிகளைப் பற்றி குறைகூறுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் கண்டனமும் தெரிவிக்கின்றோம்.
என கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a comment