மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறியுள்ள வர்களுக்கு எஹெட் கரிதாஸ் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 45 வீடுகள் கையளிக்கப்பட்டன.
இரண்டு கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளில் மழை நீர் சேகரிப்பு தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.
எஹெட் கரிதாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய இயக்குனர் அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் இது தொடர்பான நிகழ்வூ நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கரிதாஸ் நிறுவனத்தின் தேசிய இயக்குனர் வணபிதா ஜோர்ஜ் சிகாமணி இங்கிலாந்து கப்போட் நிறுவன இயக்குனர் திருமதி விக்டோரியா ஜோன் வவுணதீவு பிரதேச செயலாளர் கே.தவராஜா உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
Leave a comment