காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான அபிவிருத்தி துரிதகதியில்: ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு செப்பனிடப்பட்டு வருகின்றது. இம்மைதான அபிவிருத்தியை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் (பா.உ) அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இம்மைதான அபிவிருத்தியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இவ்வருட தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகள் காத்தான்குடியில் இம்மைதானத்தில் நடைபெற இருக்கின்றமை விசேட அம்சமாகும்.

இம்மமைதான அபிவிருத்தியுடன் மைதானத்தைச் சூழவுள்ள வீதிகளும் மீள் நிர்மாணம் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

(Pic: facebook/friends)

Published by

Leave a comment