பிரபல்யமான தமிழ் இணையத்தள ஊடகமொன்றில் இன்று வெளியான உண்மைக்குப் புறம்பான செய்தியை இங்கு தருகின்றோம்.
மானிப்பாய் சிறுவன் கடத்தல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள சிறுவனைக் கடத்தி மதமாற்றம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் கெ. ஜீவராணி இன்று உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மானிப்பாய் மாசியப்பிட்டிப் பகுதியில் பாடசாலை மாணவனான மேற்படி 13 வயது சிறுவன் கடந்த வருடம் கடத்தப்பட்டு மத மாற்றம், செய்யப்பட்டு, காத்தான்குடியில் வீட்டு வேலையாளாக பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சிறுவன் பெயர் மாற்றப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்துக்கு அமர்த்தப்பட வேளை தாயரினால் அடையாளம் காணப்பட்டு மானிப்பாய் பொலிஸாரினால் அண்மையில் மீட்கப்பட்டிருந்தான்.
முதலில் தன்னை கடத்தி வந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் சிறுவன் மல்லாகம் நீதிமன்றில் தெரிவித்திருந்திருந்தான்.
இச்சிறுவன் மல்லாக நீதிமன்ற உத்தரவுக்கமை மருத்துவப் பரிசோதனையின் பின்னர் கடந்த 22 ஆம் திகதி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தான்.
குறித்த இச்சிறுவனைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த வழக்கு ஆள்கடத்தல் குற்றம் என்பதால் இவர்களின் கைவிரல் அடையாளர்களை பதிவு செய்யுமாறு நீதவான் கூறியதுடன் சந்தேக நபர்களை எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, குறித்து சிறுவனும் அவனது தாயாரும் மன்றுக்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment