சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழு இன்று புதன் கிழமை லண்டனில் சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பு லண்டனில் லோர்ட்ஸில் இடம் பெறவுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளின் முன்னாள் தலைவர் கிளைவ் லொயிட் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பு கிரிக்கெட்டின் முன்னேற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், கிரிக்கெட்டில் தற்போது காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் கிரிக்கெட்டின் மூன்று வகையான போட்டிகளுக்கி டையிலான சமநிலை குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளது.
இதில் மிக முக்கியமாக நடுவர் மீள பரிசீலனைத் திட்டத்தில் பயன் படுத்தப்படும் தொழில்நுட் பங்கள் தொடர்பாகவும் அவற்றின் நம்பகத்தன்மை தொடர்பாகவும் கவனமாக ஆராயப்படவுள்ளது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ஆராயப்படவுள்ளதோடு அவற்றில் தொழில்நுட்பங்களின் பங்கு தொடர்பாகவும் ஆராயப் படவுள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப ங்களைப் பயன்படுத்தும் போது எல்.பி.டபிள்யு ஆட்டமிழப்புக்களை வழங்கத் தற்போது ஏற்றுக்கொள்ளப்ப ட்டுள்ள நடைமுறைகள், அவற்றில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியன தொடர்பாகவும், கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டிற் குமிடையிலான சமநிலையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித் தும் ஆராயப்படவுள்ளது.
Leave a comment