-MMS
உன்னிச்சைஅணைக்கட்டு பாலத்துக்கீழ் மறைத்துவைத்ததாக நம்பப்படும் சில ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் ஆயித்தியமலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவ் ஆயுதங்கள் யுத்தகாலங்களில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
(படம்: தமிழ்மிரர்)
Leave a comment