அமைச்சர் ரிசாத்தின் வாக்கு வங்கியை உடைக்கும் சதியே மத ரீதியான குற்றச்சாட்டு

* இன, மத, மொழி வேறுபாடின்றி சேவையாற்றிவரும்  அமைச்சர் ரிசாத் 

* ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அறிக்கை

இன, மத, மொழி வேறுபாடின்றி மக்களுக்கு சேவையாற்றி வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை வீழ்த்துவதற்கும் அவருக்குள்ள வாக்கு வங்கியை உடைப்பதற்குமே திட்டமிட்டு அவர் மீது மத ரீதியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வன்னியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இன ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழ்வதே அவரது இலட்சியமும் இலக்குமாகுமென ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

1990 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 72000 வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்வது வடபுலத்தைச் சார்ந்த அனைத்து சமூகங்களினதும் தார்மீகமான கடமையாகும்.

இவர்களை மீள்குடியேற்றம் செய்கை யில் இடம் பெயர்ந்தவர்களின் தாயகத் தில் சில பிரச்சினைகள் குறிப்பாக நிலம், நீர், உட்கட்டமைப்புகள் போன்ற பொருளாதார சமூக குடியியல், அரசியல், கலாசார காரணிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவை. சமூகங்களின் தார்மீகப் பொறுப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்.

குறிப்பாக சன்மார்க்கத் தலைவர்கள் எடுத்துக்காட்டாக இயங்க வேண்டும். அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆயரை அவ மானப்படுத்தவில்லை. இதனை ஹன்சார்டி யிலிருந்து தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்ற உறுப் பினர் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கூறுவது போன்று சங்கைக்குரிய ஆயரை அமைச்சர் ரிசாத் நாடாளுமன்றத்திலே அவதூறாகப் பேசவில்லை.

பெரியமடு முஸ்லிம்கள் 1990 இல் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்ட பின்பு இதே காணிகள் விடுதலைப் புலிகளின் மாவீரர்களினதும், போராளி களினதும் குடும்பங்களுக்கு தமிbழ விடுதலைப் புலிகளினால் பகிர்ந்தளிக்கப் பட்டன. இந்தக் காணிகளை மீள்குடி யேறும் முஸ்லிம்கள் மீளக்கோருவதில் தவறு இருக்க முடியாது.

அமைச்சர் ரிசாத்தும் அவரது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் சுமார் 20,000 முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட வன்னியில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர் மட்டும் தனியாக தமிழர், சிங்களவர் வாக்குகள் உட்பட 27,500 க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றதும் நினைவிருக் கலாம். அதாவது, கணிசமான தமிழ் வாக்காளர்கள் இவர்களுக்கு வாக்களித்தனர்.

அமைச்சர் ரிசாத் சாதி, மத, இன, மொழி வேறுபாடு காட்டாது கடின உழைப்புடன் சேவையாற்றும் ஒருவர் என்பதுதான் இதற்கான காரணம். அவரை வீழ்த்துவதற்கு இந்த வாக்கு வங்கியை உடைப்பதற்கு இனப்பூசல்தான் ஒரே காரணி என்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆகவே, அவர்களது திட்டமிட்ட செயல்தான் இந்த மத ரீதியான குற்றச்சாட்டேயன்றி வேறொன்றுமில்லை. அமைச்சர் ரிசாத் அவமானங்களை வெகுமானங்களாக மாற்றும் ஆற்றல் படைத்தவர் என்பதை தமிழ் கூட்டமைப்பு எம்.பிகள் மறந்து விட்டனர்.

Published by

Leave a comment