தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் இலங்கையில் நிறுவப்படவுள்ளது!

-MMS

தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் வெகுவிரைவில் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதற்காக 587 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையம் முதன் முதலில் இலங்கையில்  ஸ்தாபிக்கப்படவுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிலையமாக இது இயங்குமெனவு கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சார்க் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் பூட்டான் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆசிரிய பயிற்றுவிப்பாளர்களது மத்திய பயிற்சி நிலையமாக இப்பயிற்சி நிலையம் விளங்கும் .

தெற்காசியாவில் சனத்தொகை கூடிய ஏனைய நாடுகளும் இதற்கான கோரிக்கைகளை முன் வைத்திருந்த நிலையில் இலங்கைக்கே அதற்கான வாய்ப்பு கிட்டியிருந்தது.

Published by

Leave a comment