பிஸ்னஸ் எக்ஸ்கவிடிவ் அசோசியசினால் (BEA) நடத்தப்பட்ட சர்வதேச பரீட்சையில் இஸ்லாமிய நிதி மற்றும் இஸ்லாமிய பொருளாதார பாடத்தில் முதலிடத்தைப் பெற்று சர்வதேச பரிசினை இம்மாணவி பெற்றுள்ளார்.
தெஹிவளையைச் சேர்ந்த செல்வி பாத்திமா நுஸ்லா கப்பார் தெஹிவளை ஐ. பி. எல். வளாகத்தில் கற்று வருகின்றார். இவர் 2012 ஆம் ஆண்டு இஸ்லாமிய நிதித் துறையில் பட்டப் பின் பரீட்சைக்ககும் தோற்றவிருக்கிறார்.
இல்மா சர்வதேச பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக்கல்லூரியில் சிரேஷ்ட மாணவத் தலைவியாகவும் பணிபுரிந்தார். இவர் தெஹிவளை பொறியியலாளர் அல்ஹாஜ் கப்பார் ரவூப், காலஞ்சென்ற ஹாஜியானி சித்தி வஸிரா தம்பதியினரின் புதல்வியாவார்.
Leave a comment