வடக்கு மாலி இஸ்லாமிய நாடாக பிரகடனம்

ஆபிரிக்க நாடான வடக்கு மாலியை கைப்பற்றிய இரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களும் தமது பகுதியை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளன.

வடக்கு மாலியின் கொவா நகரில் கூடிய துர்கா கிளர்ச்சியாளர்களும், இஸ்லாமிய குழுவான அன்ஸார் தின் கிளர்ச்சிக் குழுவும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இதில் அன்ஸார்தின் கிளர்ச்சியாளர்கள் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டவர்களாவர். இவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் உள்ளது.

மாலியில் கடந்த மார்ச் மாதம் இராணுவப் புரட்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்த இந்த இரு கிளர்ச்சி குழுக்களும் வடக்கு மாலி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் வடக்கு மாலியை மீட்பதற்கு 3000 பேர் கொண்ட படை அங்கு அனுப்பப்படும் என பிராந்திய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

எனினும் மேற்படி படை அனுப்பப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

Published by

Leave a comment