காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளரும் முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமாவார்.
காத்தான்குடி முகைதீன் மெத்தை பள்ளிவாசலில நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தின் போதே புதிய தலைவராக மர்சூக் அகமட்லெப்பை தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் சம்மேளனத்தின் புதிய செயலாளராக மௌலவி ஏ.எம்.அப்துல் காதரும் பொருளாளராக எம்.பாயிஸும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
Leave a comment