சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 113 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட 113 இலங்கையர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அவுஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த ஆறு முகவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகயில் வைத்து இன்று (28) அதிகாலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கடல் பகுதிக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் டொல்பின் வர்க்க வான்கள் ஏழு என்பன குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியா செல்லவென ஒரு நபரிடம் தலா இரண்டு லட்சம் ரூபா பணம் முகவர்களால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடம் பிரதான முகவர் 316 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment