கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அத்துடன் ஏம்மை அறிந்தவரே எம்மை ஆள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண அறிவியல் கண்காட்சியில் வெற்றியீட் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுல்லா தொடர்ந்தும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எங்கள் கிழக்கு மாகாணத்திற்கு எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் இல்லாமல் சியமலவாண்டுவயில் இருந்த ஒருவரை கொண்டு வந்து எங்கள் மாகாணத்தில் உள்ள பாண்டித்துவத்தை பற்றி பேச முடியுமா வாக்களிக்க சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அப்படியென்னறால் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். எவராக இருந்தாலும் கிழக்கு மாகாணம் மற்றுமொருவருக்கு பறிகொடுப்பதை நாங்கள் ஒரு போதும் விரும்பமாட்டோம்.
எப்பொழுதும் அரசியலில் நிதானம் மற்றும் நியாயம் ஆகியன வேண்டும். மர்ஹூம் அமைச்சர் அஷ்ரப் 2012ஆம் ஆண்டில் இவ்வாறான தொரு கனவு கண்டார். ஆனால், அவர் ஒரு குறிகிய வட்டத்திற்குள் நின்று கிழக்கில் மாகாணத்தில் 2012ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசினார் என்றால் எவ்வளவு வெட்கத்தனமாக இருக்கும். நாங்கள் ஒருபோதும் அப்படி சொல்லமாட்டோம. எதையும் பேசும் போது கவனமாகவே பேசுவோம்” என்றார்.
கிழக்கு மாகாண தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.பாயிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும் கல்முனை பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment